Sunday, May 27, 2012

டதி தமிழ் ஆரம்ப தொடக்க பள்ளி-

எழுத்தறிவித்தவன் இறைவன்

26-04-2012 விழாவிற்கு வந்த எங்கள் டதி ஸ்கூல் ஆசிரியைகள் புகைப்படங்கள்

_DSC0066

_DSC0075

 

_DSC0080

_DSC0081

 

_DSC0087

 

_DSC0091

 

_DSC0095

 

_DSC0098

 

_DSC0100

 

_DSC0105

_DSC0117

_DSC0107

 

Labels: , , , , , , , , ,

Saturday, May 5, 2012

டதி தமிழ் தொடக்க பள்ளி

"இயேசுதேவனே என்ஜீவனே ஏழை பிள்ளை நான் என்னை இரட்சியும் சுவாமி -ஆமென்" 

God, grant me the serenity to  accept the things I cannot change;the courage to change the things I can; and the wisdom to know the difference. –Amen

ஒரு தாயின் கருவறைக்குள் மறுமுறை நுழைய முடியுமா?அப்படி ஒரு ஏக்கம் எனக்குள் இருந்த அந்த டதி ஸ்கூல் நினைவுகள்.

நுழைந்து பார்க்கும் வாய்ப்பு  வந்தது.பாஸ்கர் எனும் பள்ளி தோழர் மூலம்.

1982  இல் பள்ளி இறுதி தேர்வு முடிகிறது.ஐந்தாம் வகுப்பு இறுதிநாள் ரேச்சேல் டீச்சர்,சுகந்தி டீச்சர்,மரினா டீச்சர் அறிவுரை தந்து வழியனுப்பும் நேரம்.எல்லோரிடமும் கேட்கிறார்கள் யார் யார் இங்கிலீஷ் மீடியம் சேர்ந்து படிக்கபோகிறார்கள் என்று.கை உயர்த்துகிறோம் .எப்படி ஆறாம் வகுப்பு படிப்பை தொடரவேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார்கள்.

எனக்கு எப்படா ஸ்கூல் மணி அடிக்கும் என்று எதிர்பார்ப்பு .மணி அடித்தது.ஐந்தாம் வகுப்பை முடித்து விட்டோம் என்று பள்ளிகூடத்தை விட்டு ஓடியது என் நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு தெரியாது நான் என் நண்பர்களை,பள்ளிகூடத்தை  பார்க்க முப்பது வருடங்கள் தவம் இருக்க வேண்டும் என்பது.

பழையடீச்சர்களை,பள்ளிகூடத்தை பார்க்கும் ஆவல் வருகிறது.. மனது வேதனை படுகிறது. எவ்வளவு நாள் நான் ஏங்கிருக்கேறேன் தெரியுமா?....தொலைந்து போன நாட்களை ...என் மனம் பலமுறை அசை போட்டுள்ளது....   

ஓவ்வொரு முறையும் நாகர்கோயில் வரும்போது எஸ் எல் பி  ஸ்கூல் ஐ போல் டதி  ஸ்கூல் ஐயும் தேட ஆரம்பிக்கின்றேன்.பல இரவுகள் நான் தூங்கியது இல்லை.முப்பது வருடங்கள் ஓடி விட்டது.

இரு மாதங்களுக்கு முன் எனக்கு கை பேசியில் ஒரு அழைப்பு வந்தது .எனது பள்ளி தோழர் பாஸ்கர் ஜாய் டீச்சர் வகுப்பில் மூன்றாம் வகுப்பு என்னுடன் படித்தவர்.கோர்ட் எதிர்புறம் அவர் வீடு(தற்போது கோயம்புத்தூர் இல்).1976 -1982 வரை டதி  ஸ்கூலில் படித்த மாணவ மாணவியர்களை  ஒருங்கு இணைக்கும் ஒரு முயற்சி பேசுகிறேன் பேசுகிறேன் 30 நிமிடங்கள் ஓடி விட்டது.அதே போல் தோழர் உதய் இன் தொலை பேசி அழைப்பும் தொலைந்து போன நினைவுகளை ஊயிர்ப்பிக்கும் வாய்ப்பாக அமைந்தது.  

பாஸ்கர்,உதய்,வைட் மற்றும் பலரது முயர்ச்சியால்  1976 –1982 வரை  படித்த மாணவர்கள் தங்கள் துணையுடன் 26-04 -2012  அன்று சந்திக்கவேண்டும் என்பது. இறை அருளால் அது  ஆண்டவர் சித்ததால் நிறைவேறியது. 25  மாணவர்கள் ஒன்று சேர்ந்தனர்.

img012

குடும்ப கூடுகை அட்டை /விளம்பரம்

IMG_2834

தங்கள் பிள்ளைகளை போல் மேலாக எங்களை நேசித்த டீச்சர்கள் கமலா பாய் டீச்சர்,ரேச்சேல் டீச்சர்,ஜாய் டீச்சர்,ஐ வி டீச்சர் ,விக்டோரியா டீச்சர் ,மெரினா டீச்சர்.

பழைய பள்ளி தோழர்கள் உதய்,பாஸ்கர் ,இளஞ்செழியன்,திலீப் ,ஸ்ரீகாந்த்,பாலசுந்தரம், கிங் ,ராபர்ட் கிங்,சைலஸ்,பென்சொம் ,வீர லக்ஷ்மன்,அருள் ராஜ், வைட்,தங்க வேல்,ஜெய கண்ணன் . பள்ளி தாளாளர், ரேச்சேல் டீச்சர்இன் கணவர்.

IMG_2862

 

IMG_2861

நொறுங்கிப் போன நாம் படித்த பள்ளி (ஒன்றாம் ,மூன்றாம் நான்காம் வகுப்பு கட்டடத்தின் இன்றைய நிலை).கண்ணீர் வருகிறது. இதை உயிர்ப்பிக்க முடியுமா?

IMG_2874

பிரார்த்தனை ஹாலின் முன் பகுதி.(இரண்டு பக்கமும் வகுப்புகள் உண்டு) இப்பொழுது இடிந்த நிலையில் 

img016

இடிந்த அந்த இடிபாடுகளின் அன்றைய சரித்திரம் பாருங்கள் ஒரு மன்னன் ஆட்சி செய்வதை (அவ்வையார் அதியமான் நாடகம் ஆண்டு 1982 .அதியமானாக -ஜான்சன்,காவலாளியாக சதீஷ், ஒரு அமைச்சராக சோம சுந்தரி )

IMG_2827

ஆறுதல் தந்த மாறாத வேப்ப மரங்கள்.

IMG_2876

பிஷப் மாளிகை மெருகு கூடி இருக்கிறது

IMG_2818

எங்களை ஒருங்கிணைத்த இந்த நாளில் நாங்கள் படித்த பள்ளிக்கு எங்களது சிறு காணிக்கை.

IMG_2887 

டதி ஸ்கூலில் வெட்டப்பட்ட கல் வெட்டு என் மனதை ஈர்த்தது.ஒவ்வொரு பழைய ஆசிரியைகளும் தங்கள் மாணவிகளை அவர்கள் பெற்ற மேன்மையை பார்க்க இருந்த தவிப்பை இந்நாளில் உணர்ந்தேன்.

ஆண் சிறந்தவரா பெண் சிறந்தவரா என்ற 1982  ஆம் ஆண்டு பட்டி மன்றம் எனக்கு ஞாபகம் வருகிறது ( ஜெப ஷீலா ,சோம சுந்தரி, கிரேஸ் மற்றும் ஹரி ஹர புத்திரன் இளஞ்செழியன் ஜோசி பங்கேற்ற அந்த நிகழ்ச்சி என் ஞாபகத்திற்கு ஏனோ வருகிறது). இளஞ்செழியனை பார்த்தேன்  மற்றவர்கள் எல்லாம் எங்கே? 

IMG_0058

 அரை கிளாஸ் போட்டோ:

நினைவில் நிற்பவர்கள்

ராஜாராம், அனீஸ்,ஹேமா,சாந்தி மலர்,பகவதி பெருமாள்,சுதா,சதீஷ்,ஸ்ரீகாந்த்,தெய்வ ராணி,ஜாஸ்மின்,அழகப்பன்,கோசலா,மகேஷ்,விஜி

IMG_1142

இரண்டாம் கிளாஸ் போட்டோ:

நினைவில் நிற்பவர்கள்

எம் கே ராஜன்,கோல்ட் ,ராஜா சுதன குமார், டன்ச்லி,சைலஸ் ,ஹரி ஹர புத்திரன், பாலசுந்தரம், ராம்மோகன், பாமினி,ஹேமா ஸ்ரீ லதா ,சேகர், ரஞ்சித் சிங்க் ,சதீஷ்,குமரகுரு,ஜெயா ,கோசலா,விஜி,அழகப்பன்,செல்வகுமார், கே ராஜேஷ், ராஜு

IMG_0151

ஐந்தாம் வகுப்பு போட்டோ:

நினைவில் நிற்பவர்கள்

பால் சிபி, பாலசுந்தரம்,ராஜாராம், எம் கே ராஜன் ,ஜான்சன்,ஞான குமார் ,முஜிபுர் ரெஹ்மான் ,அழகப்பன்,ஆரோக்கிய ஜெயசீலன் ,சீலன், விஜி, நிர்மலா சுமதி, சாரதா ,கிருஷ்ணகுமாரி, தெய்வ ராணி, சாந்தி மலர், ஜெகதா, இளஞ்செழியன், ஷேக்,அருள் ராஜ் ,லதா ,சுதா ,சுப்ரமணியன்,மகாதேவன்,சதீஷ்,ஜோசி,ஹரி ஹர புத்திரன், மெரினா டீச்சர்,ஹேமா, கிரேஸ்,ஜேபஷீலா,சோம சுந்தரி,பெல்சி

இன்னும் பல படங்களுடன் நம் பள்ளியை பற்றி சொல்வேன் .

Labels: , , , , , , ,